Vaadivasal movie Update : வாரே வா... சூர்யாவின் வாடிவாசல் படத்தின் வேறலெவல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
Vaadivasal movie Update : வாடிவாசல் படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும், இதற்காக நடிகர் சூர்யா பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
கோலிவுட்டில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி சில படங்கள் தேசிய விருதுகளையும் வென்று அசத்தி உள்ளன. கடைசியாக இவர் இயக்கத்தில் அசுரன் படம் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்களது காம்போவில் தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக சூர்யா நடிக்க உள்ளதால இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா இயக்கிய வாடிவாசல் என்கிற் நாவலை தழுவி இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெற உள்ளதாகவும் இதற்காக நடிகர் சூர்யா பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி வாடிவாசல் படத்தின் இசைப்பணிகளை வெற்றிமாறனுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள ஜிவி, 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் கூறி உள்ளார். ஜிவி பிரகாஷின் கொடுத்த இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... Ilaiyaraaja in Dubai : இசைஞானியும்... இசைப்புயலும்! ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா