இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட் திரையுலகத்தை கலக்கிக்கிட்டு இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

ஏற்கனவே அவர் அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் இப்போ  '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்காரு.

இந்த படத்துல,  தமன்னா கேரக்டரில் அவரே நடிப்பார் என்று ஒரு சில செய்திகள் வெளியாகிவந்த நிலையில்.தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷாரதா கபூர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

அவரிடம் இந்த படத்தில் நடிப்பது குறித்து படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படத்தில் நடிப்பது குறித்து ஷாரதா விரைவில் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க ஷாரதா கபூர் ஒப்புக்கொண்டால் இதுவே அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சுகுமார் இயக்கிய இந்த படத்தை தமிழில் எம்.எம்.சந்திரமெளலி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.