கோலிவுட் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இசையமைப்பாளர், மற்றும் நடிகர் என்கிற இரண்டு குதிரையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

இரண்டு துறையிலும் படு பிசியாக இருந்து வரும், ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் அரை டஜனுக்கு அதிகமான படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இவருக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்து விட்டாலும், இவருடைய நீண்ட நாள் கனவு என்பது, சர்வ தேச அளவில் ஒரு ஆல்பத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என்பது தான். 

இவருடைய இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது.  ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக இவர் ஏற்கனவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த நிலையில், நேற்று இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது. 

ஜீவி பிரகாஷ் மற்றும் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா கம்போஸ் செய்து பாடி உள்ள இந்த ஆபத்தை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும், தனுஷ் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷின் கனவை நினைவாக்குவது போல், வெளியாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.