மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இதன் காரணமாக பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர்  முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்திற்கு குப்பத்து  ராஜா' என்ற  சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளார்.

இந்த படத்தில் G V பிரகாஷ், கதாநாயகனாக நடிக்கிறார், இப்படத்தில்  G V பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர். 

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் 'ஜாங்கிரி' மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் நாயகனான G V பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.