நடிகரும் , பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சிறுமி குறித்து மிகவும் கோவமாக ட்விட் செய்துள்ளார்.

கடந்த வாரம், சேலம் மாவட்டம், தளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு தம்பதிகளின் 14 வயது  மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் காதலிப்பதாக கூறி அவரை பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதனை தன் தாய்... தந்தையிடம் ராஜலட்சுமி கூறியதால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், ராஜலட்சுமி தனியாக இருந்த நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து ராஜலட்சுமியின் தலையை இரண்டாக வெட்டி கொலைசெய்தார். 

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தினேஷ்குமாரை அவரது மனைவியே போலீசில் பிடித்து கொடுத்தார். தினேஷ் குமாரை கைது செய்து இது குறித்து ஆத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மிகவும் வேதனையோடு,  நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை இது' என்று கூறியுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.