இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். 

இந்நிலையில் இவர் இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், பிக்பாஸ் ரைசா நடிக்கும், ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியராக அவர் நடித்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஃபேண்டசி காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது.