சங்கீதத்தை மையமாக வைத்து இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி இருக்கும் திரைப்படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலரை, நடிகர் தனுஷ்  நேற்று வெளியிட்டார். சங்கீதம் கற்றுக்கொள்வதற்காக ஜி.வி.பிரகாஷ் போராடுவது, இதில் இருந்து, எந்த பிரச்சனைகள் வருகிறது என்பதை விளக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது.