இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடித்து வருகிறார். அப்பா தனுஷூக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இதுதான் மஞ்சு வாரியார் அறிமுகமாகும் முதல் படம்.

இந்த படத்திற்கு இசையமைத்து  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணியை தொடங்கிவிட்டதாக சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது 'அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும்கூறியுள்ளார். 

மேலும் தனுஷ், வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு ஆகிய இந்த பெருமைக்குரிய கூட்டணியில் இணைந்துள்ளது தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்தப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 71  ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.