Gunmans police protection from intimidating Rajini Someone has clashed

மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, “என் தந்தையை தவறாக சித்தரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு தூப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கபாலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், பா.இரஞ்சித் அடுத்ததாக இணையப் போகும் ஒரு படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் கதை மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் யாரோ கிளப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் ஷேகர், நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நீங்கள் ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் எனது வளர்ப்பு தந்தையின் வாழ்க்கையை எடுக்கப்போவதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன். அதில் எனது தந்தையை கடத்தல்காரர் போலவும், தாதா போன்றும் சித்தரிக்க உள்ளதாக தெரிந்து கொண்டேன். என்னுடைய வளர்ப்பு தந்தை மீது எந்த வழக்கும் இல்லை. நீதிமன்றம் அவருக்கு தண்டனையும் அளிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவரை தவறாக சித்தரித்து படம் எடுப்பது கண்டனத்திற்கு உரியது.

எனது வளர்ப்பு தந்தையின் வாழ்க்கையை தவறாக சித்தரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று பகிரங்கமாக கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் ரஜினிக்கு வந்த கடிதம் மிரட்டல் கடிதான் என்று யாரோ கிளப்பிவிட்டு ரஜினிக்கு தூப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும் கிளப்பிவிட்டுள்ளனர்.