சக்தி வாய்ந்த குண்டின் மூலம் உலக அரசியலை நெற்றி போட்டில் அடித்தது போல பதிவு செய்துள்ளார் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள "இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். "பரியேறும் பெருமாள்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் தென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. கடலில் விழுந்த சக்தி வாய்ந்த குண்டு, சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களுக்கு மத்தியில் வெடித்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக கொண்டு கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சக்தி வாய்ந்த குண்டின் மூலம் உலக அரசியலை நெற்றி போட்டில் அடித்தது போல பதிவு செய்துள்ளார் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இன்று படம் வெளியான நிலையில் காலை முதலே ரசிகர்கள் படம் குறித்து டுவிட்டரில் பாராட்டி வருகின்றனர். உலக அரசியலை சாமானியர்களுக்கும் புரியும் படி இயக்குநர் படைத்துள்ளதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

Scroll to load tweet…

இரும்புக்கடையில் சாமானியர்களின் உரிமைக்கான போராட்டம், தினேஷ்-ஆனந்தி காதலில் ஆணவக்கொலை, கடற்கரையில் சிக்கும் குண்டில் மூன்றாம் கட்ட நாடுகளின் அரசியல் என உள்ளூர் பிரச்னை தொடங்கி உலக அரசியல் வரை தட்டி பிரித்துள்ளதாக படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் கதாபாத்திர தேர்வு, தினேஷ், ஆனந்தி உள்ளிட்டோரின் ஏதார்த்த நடிப்பு ஆகியன படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் ரித்விகா தோழர் என்ற வார்த்தையை பயன்படுத்தும் நேர்த்தி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

Scroll to load tweet…

இந்த ஆண்டிற்கான சிறந்த படங்களின் பட்டியலில் "இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு" படத்திற்கு கண்டிப்பாக இடம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. படத்தை பார்த்த வெளிநாட்டு தம்பதி, தங்களது கருத்துக்களை கூட பகிர முடியாமல் கண் கலங்கி செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

உட்கார்ந்த இடத்தில் இருந்தே டுவிட்டர், பேஸ்புக் மூலம் உச்ச நடிகர்களின் படத்தை கூட ஓரம் கட்டவைக்கும் ரசிகர்கள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்திற்கு சிறப்பான வரவேற்பளித்துள்ளனர்.