தரமான, வித்தியாசமான படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்  'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இதில், கதையின் நாயகனாக 'அட்டக்கத்தி' தினேஷும், நாயகியாக 'கயல்' ஆனந்தியும் நடித்துள்ளனர். மற்றொரு முக்கிய கேரக்டரில் 'பிக்பாஸ்' புகழ் ரித்விகா நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இவர் வேறுயாருமல்ல, பா.ரஞ்சித்தின் உதவியாளர்தான். 

 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்', 'மகிழ்ச்சி' ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா, இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 
ஏற்கெனவே, இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருப்பதால் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். 

அதேநேரம், இறுதிக்கட்டமாக குண்டை மெருகேற்றும் வகையில், படத்திற்கான சவுண்ட் டிசைன் மற்றும் ஃபைனல் மிக்ஸிங் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. 


தற்போது, இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' வெடிக்க ரெடியாகியுள்ளது. வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலையும் இணைத்து பேசுவுள்ள 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு' படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.