சபாஷ்... ஆண்களுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த ரேணுகா..! ஜீவனந்தத்துக்கு எதிராக குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்!
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும், 'எதிர்நீச்சல்' சீரியலில் அப்பத்தாவின் 40% சொத்தை ஜீவானந்தத்திடம் இருந்து கைப்பற்றும் முயற்சி, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான் இன்றைய ப்ரோமோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.
'எதிர்நீச்சல்' சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக தற்போது குணசேகரனுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாமல் போன நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். குணசேகரனுக்கு, பிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் உரிய சிகிச்சைகள் எடுத்தால் ஒரு வேலை அவரின் கை கால்கள் சரியாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே நேரம் சரியாகாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
புதிய படத்திற்காக கைகோர்க்கும் ராணா - துல்கர் சல்மான்!
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் தன்னுடைய கையை விட்டு நழுவிய 40 சதவீத சொத்துக்களை, ஜீவானந்தத்திடம் இருந்து மீட்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் குணசேகரன். அதேபோல் இந்த சொத்து, அனாமத்தாக ஜீவானந்தத்திடம் போய் விடக்கூடாது என்பதில் ஜனனியும் உறுதியாக இருக்கிறார். எனவே ஜீவானந்தத்தை எதிர்க்க ஜனனி தயாராகி இருந்தாலும், ஜீவானந்தம் பெயருக்கு அந்த சொத்துக்கள் சென்று விட்டதால், அவர் மீண்டும் கொடுப்பாரா? என்பது சந்தேகமே. அதே போல் ஜீவானந்தத்திற்கும் அப்பத்தாவுக்கும் என்ன உறவு என்பதும் விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில், குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் "சொத்துக்களை மீட்டு கொண்டுவர வேண்டியது, இந்த வீட்டு மருமகள்களின் கடமை என சொல்ல".. அவருக்கு நோஸ்கட் கொடுப்பது போல் ரேணுகா, "ஆம்பளைங்க தான் இத்தனை பேரு இருக்கீங்க இல்ல களத்துல இறங்கி ஆடுங்க" என துணிச்சலாக பேசி அதிர வைக்கிறார். இதற்க்கு ரேணுகாவின் கணவர் ஞானம் அவரை அடிக்க கை ஓங்குகிறார். இதைப் பார்த்து டென்ஷன் ஆகும் ஜனனி, " உங்களுக்கு சொத்த நாங்க வாங்கி தருகிறேன் "என கூற... இதை தொடர்ந்து, ஞானம் மற்றும் கதிரிடம் குணசேகரன் ஆடிட்டர் சொன்னது போல் டாக்குமெண்ட் எல்லாம் பொம்பளைங்களுக்கு பேர்ல எழுதி இருக்குல்ல என்று சொல்லி எதோ மாஸ்டர் பிளான் போடும் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.