பிக்பாஸ் வீட்டில், பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பல பிரச்சனைகள் நடந்து வந்தாலும், ஒண்ணுமே இல்லாத ஒரு பிரச்னையை அனிதாவும் - சனம் ஷெட்டியும் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக, பேசி வருவது பார்பவர்களையே கடுப்பாக்கி உள்ளது.

சரி இனியாவது அந்த பிரச்சனை இருக்காது என்று பார்த்தல்  மீண்டும் இந்த பிரச்னையை கொண்டு வந்து ரியோவிடமும் பேசுகிறார் சனம் ஷெட்டி. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் அதுவும் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என கூறி வரும் சிலர், குரூப்பிஸம் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாகவே தற்போதைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

நேற்று சனம், அனிதா மற்றும் ரியோ வாக்குவாதம் நடந்த நிலையில் இன்று அந்த வாக்குவாதம் குறித்து விளக்கம் அளிக்கிறார் சனம். அர்ச்சனாவின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் ரியோ ரொம்ப ஹாய்யாக பேசுகிறார்.

இதற்கு முன்னாடி நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து குட் மார்னிங் என்றாவது சொல்லிக்கொண்டு இருந்தோம். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லாமே உடைந்து போய்விட்டது. குட்மார்னிங் கூட சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார் அதற்கு நான் எவ்வளவோ உனக்கு விளக்கம் அளித்து விட்டேன், இதற்கு மேல் என்னால் விளக்கம் அளிக்க முடியாது, நான் ரொம்ப டயர்டா ஆகி விட்டேன் என்று ரியோ, சனம்ஷெட்டியிடம் கூறுகிறார். 

சனம் தன்னுடைய தரப்பை ரியோவிடம் கூறும் போது கூட இடையில் அர்ச்சனா தலையிட்டு பேசுகிறார். இதனை வழக்கு போல் நிஷா வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.