நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மற்றும் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி: காணக்கிடைக்காத பல அற்புத புகைப்படங்கள் உள்ளே...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 வது பிறந்த நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வரும் நிலையில் அவரது கலையுலக வாரிசு என்று நம்பப்படும் கமல் உட்பட தமிழ்த்திரையுலக கலைஞர்கள் அனைவரும் தங்களது வலைதள பக்கங்களில் அவரது பெருமை குறித்து பகிர்ந்து வருகின்றனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் மற்றும் பொது இடங்களில், நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படம் வைத்து மாலை அணிவித்து, ரத்த தானம் மற்றும் அன்னதானம் போன்ற சமூகநலப்பணி நடைபெறுகின்றன. 

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மற்றும் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நடிகர் திலகம் சிவாஜி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே போன்று,தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது.மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த ஒரு தருணத்தில் சிவாஜியின் பல்வேறு புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.