Asianet News Tamil

மனநிலை சரியில்லாம போய்கிட்டு இருக்கு...! டிக் டாக்குக்காக மோடியிடம் கதறியபடி கெஞ்சும் ஜி.பி.முத்து..!

சீன பொழுது போக்கு செயலிகள் மூலம், பலர் பிரபலமடைந்துள்ளனர். டிக் டாக், ஹெலோ  போன்றவற்றில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, சிலர் வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல், காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.
 

gp muthu emotional speech for tik tok ban
Author
Chennai, First Published Jul 4, 2020, 8:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சீன பொழுது போக்கு செயலிகள் மூலம், பலர் பிரபலமடைந்துள்ளனர். டிக் டாக், ஹெலோ  போன்றவற்றில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, சிலர் வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல், காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.

அதிலும், செத்த பயலே... நாரா பயலே என,  இவர் தன்னை கழுவி கழுவி ஊற்றியவர்களுக்கு கமெண்ட் செய்து திட்ட, அதற்கு ஒரு படி மேல் போய், கேட்க முடியாத வார்த்தைகளால் இவரை அவர்கள் திட்டுவார்கள். போர் அடிக்கும் போதெல்லாம் திட்டி... திட்டி... விளையாடுவது தான் இவர்கள் பொழப்பே...

எப்படியோ இவர் முகம் அனைவருக்கும் தெரிய துவங்கியதும், இவர் ரவுடி பேபி சூர்யாவுடன் செய்த காதல் லீலைகள் பல. சூர்யா ஜி.பி.முத்துவை மாமா என அழைக்க, அதற்கு இவர் அன்பே... ஆருயிரே என உருகிய வீடியோக்கள் டிக்-டாக்கில் ரொம்ப பிரபலம். இருவரும் ஒன்றாக சேர்ந்து, டிக் டாக்கில் கூடி கும்மியடித்து வீடியோக்காய்  சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இப்படி தினமும் டிக்-டாக் பல பஞ்சாயத்துக்களை வாண்டடாக போய் சந்தித்து வந்த இவர்களை போன்ற பலருக்கு டிக்-டாக் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது திறமையை வெளிக்காட்டும் இடமாக இருந்த, சீன செயலிகளை இந்தியாவில் மொத்தம் 14 மொழிகளில் செயல்பட்டு வந்தவை தடை செய்யப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அந்த வகையில் ஏற்கனவே ஜி.பி.முத்து, டிக் டாக் தடை செய்ததால் நெஞ்சு வலிப்பதாக கதறினார். எனவே இனி சிங்காரி செயலியை தான் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, தற்போது இவருடைய முகநூல் பக்கத்தில், நானும் பல செயலிகளை பயன்படுத்தி பார்த்தேன் டிக் டாக் போல் இல்லை. எனவே இந்திய பிரதமர் மோடி அவர்களே  தயவு செய்து டிக் டாக் ஓப்பன் பண்ணி விடுங்க என, கலங்கிய கண்களுடன் கெஞ்சியுள்ளார். மேலும் இதனால் தன்னுடைய மனநலம் பாத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

டிக் டாக்  போனதால், பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு, எதையாவது பேச வேண்டும் என்று, டிக் டாக் போனதற்கு இவர் பீல் பண்ணுவது போல் நடிப்பதாக, வழக்கம் போல் சிலர் இவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்... என்ன சொல்வது? சோறு தண்ணி இல்லாம வாழ முடியாத காலம் போய், சீன செயலி டிக் டாக்  இல்லாமல் வாழ முடியல என்று சொல்லும் அளவிற்கு இந்திய குடிமகன் வந்துட்டான்.

வீடியோவை பார்க்க: எனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..!


 

Follow Us:
Download App:
  • android
  • ios