ஜிபி முத்து, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. இவர் டிக்-டாக் மூலம் மிகவும் பிரபலமானார். ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை வாயிற்கு வந்த வார்த்தையால் திட்டி பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி விடும்.

டிக்டாக் தடைக்கு பின் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜிபி முத்து. நெல்லை தமிழில் எதார்த்தமாக பேசுவது தான் இவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்துள்ளது.
டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சன்னி லியோருடன் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளார். அந்த வீடியோவில், அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டுட்டான். என்னுடைய உயிர் நண்பன் என்னை விட்டு போய் விட்டான் எனக் கூறி கண்கலங்கி அழுதுள்ளார் ஜி பி முத்து.
