வர்மா:

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். 

படப்பிடிப்பு:

ஏற்கனவே படத்தின் கதாநாயகன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் நாயகி:

படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் படத்தின் நாயகி யார் என இதுவரை படக்குழுவினர் தேர்வு செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில், பிரபல நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்ததை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் கௌதமி மற்றும் இயக்குனர் பாலாவிடம் இருந்து  இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான இந்த பிடத்தில் சுகுமார் ஒளிப்பதிவாளராகவும், ராதான் இசையமைப்பாளராகவும், ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகன் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.