ஜோதிகா தஞ்சாவூர் கோயில் பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் நடிகை கவுதமி அந்தக் கோயிலுக்கு சென்று கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவின் பேச்சு இந்து மக்களை புண்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்து இன்னும் அடங்கவில்லை.  சிவகுமார் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஜோதிகா, சிவகுமார் இருவரும் முன்பு பேசிய பேச்சுக்கள் ஒரு பக்கம் இந்து அமைப்புகள் எதிர்ப்பை ஏற்படுத்த மறுபக்கம் சூர்யாவின் திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிட சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது, அதற்காக தனியார் ஆன்லைன் திரைப்பட பொழுதுபோக்கு தலமான அமேசான் நிறுவனத்திடம் 8.6 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. சூர்யாவின் மைத்துனர் மூலம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இனி சூர்யாவின் திரைப்படத்தை வெளியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சூர்யாவின் சூரரை போற்று. திரைப்படம் திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமுதாயத்தில் பாரம்பரியமாக மரியாதையுடன் திகழ்ந்த சிவகுமார் குடும்பம் தொடர்ந்து எதிர்ப்பை சம்பாரிக்க காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்து கோவில்கள் குறித்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசியதுதான் என இப்போது சிவகுமார் உணருகிறாராம். இதே நிலையில் சென்றால் சொந்த மக்கள் எதிர்ப்பை சம்பாரிக்க வேண்டியது வரும் எனவும் இனிமேல் யாரும் பொது அரசியல், நிகழ்வுகள் பேசவேண்டாம் என குடும்பத்திற்கு சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

ஜோதிகாவின் பேச்சை வைத்து பெரியாரிஸ்டுகள் ஆதரவு தெரிவிப்பது போன்று நம்மை வைத்து அரசியல் செய்வதாக சிவகுமார் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். எனவே சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு வாயைதிறக்கவேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜோதிகா தஞ்சாவூர் கோயிலை இழிவு படுத்தியதாக கூறும் சர்ச்சை ஓய்வதற்கு முன் நடிகை கவுதமி தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று பிரகதீஸ்வரரை வணங்கி வந்துள்ளார். அவர் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.