13 வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌதமி திடீர் என கமலை விட்டு விலகுவதாக நேற்று தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார், அதற்க்கு காரணம் தனது மகள் வருங்காலத்திற்காக பிரிவதாக விளக்கமும் கொடுத்தார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தன் மனதில் பட்டத்தை தைரியமாக பேசும் கமல் ஹாசன், இந்த விஷயம் காட்டு தீ போல் பல மீடியாக்களில் பற்றி எரிந்தாலும் தற்போது வரை மௌனம் சாதித்து வருகிறார்.
மேலும் இவரை போலவே கவிதை நயத்துடன் எழுத பட்ட சில கடிதங்களும் வெளியாகி ஒரு பக்கம், மக்களிடையே வதந்திகளை பரப்பி வருகிறது.
தற்போது இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கவாவது, இந்த திடீர் பிரிவிற்கு காரணம் சொல்வாரா கமல்.
மேலும் ட்விட்டர் பக்கத்திலாவது பதில் தருவாரா என பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
