உலக நாயகன் கமல்ஹாசனும் கௌதமியும், திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆண்டுகள் ஒன்றாக சேர்த்து வாழ்ந்தனர்.

ஆனால் சமீபத்தில் தனது மகள் நலனை கருத்தில் கொண்டு கமலை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார் கௌதமி.

ஆனால் இது நாள் வரை கௌதமி பிரிவை பற்றி மௌனம் சாதித்து வருகிறார் கமல். எந்த ஒரு கருத்தையும் துணித்து பேசும் கமலே இப்படி செய்வது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வரும் நிலையில் மீண்டும் அவர் நடித்த சபாஷ் நாயுடு படம் பக்கம் அவரது கவனம் திருப்பியுள்ளது.

இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக கௌதமி பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்தது.

மேலும் இருவரும் வாழ்க்கையில் இருந்து பிரிந்தார்களே தவிர அவர்களுக்குள் எந்த மனக்கசப்பும் இருப்பதாக தெரியவில்லை.

அதனால் மீண்டும் கௌதமி கமலுடன் இணைத்து இந்த படத்தில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க படுகிறது.