gowtham menon loversday special

கௌதம் வாசுதேவ் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன் என்றாலே காதல் என்ற வார்த்தைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு தன் படங்களில் காதல் ரசம் கொட்ட கொட்ட எடுத்திருப்பார். அதற்கு சிறந்த உதாரணம் 2001 ம் ஆண்டு இவர் இயக்கிய மின்னலே படம்தான்.இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.காதலர்கள் இந்த படத்தை திருவிழாவாகவே கொண்டாடினார்கள். 

காதல் படங்கள்

இதற்குபடியாக அவர் எடுத்த காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை பார்த்தால் காதலிக்கும் ஆசை இல்லாதவர்களுக்கும் காதல் ஆசை வந்து விடும்.

பிப்ரவரி14

தற்போது தனுஷின் ”என்னை நோக்கி பாயும் தோட்டா”, மற்றும் விக்ரமை வைத்து ”துருவ நட்சத்திரம்” போன்ற படங்களை இயக்கி வருகிறார்.
வரும் பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

ஜி.கே.சினிமாஸ்

இதையொட்டி காதல் பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா,,நீதானே என் பொன்வசந்தம், போன்ற படங்களை சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் திரையிடப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு காதல் படங்கள் வேறு திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள்.