வாலு படத்தை இயக்கிய விஜயச்சந்தர் படத்தை புறக்கணித்து விட்டு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க போனார் விக்ரம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியானதுமே சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் விக்ரம் இருக்கும் போஸ்ட்டரை வெளியிட்டு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் கெளதம் மேனன் .

இந்நிலையில் சம்பள பிரச்சனை காரணமாக கெளதம் மேனனுக்கும், விக்ரமுக்கும் இடையே ஒரு சில பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்த விக்ரம் தற்போது கிளீன் ஷேவ் செய்து வலம்வருகிறாராம். மேலும் விரைவில் விஜயச்சந்தர் படத்திலேயே திரும்பவும் நடிப்பதற்காக தான் இந்த கெட்டப்பில் மாறியுள்ளார் என கூறப்படுகிறது .