கௌதம் மேனன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் அடுத்த மாதம் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வெளிவரவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழுக்கு அறிமுகமாகிறார் மஞ்சிமா மோகன், ஆனால் இவர் இந்த படம் நடிக்கும் போதே அடுத்த படத்திற்கும் சேர்த்து கௌதம் அக்ரிமெண்ட் போட்டுவிட்டாராம் கெளதம் மேனன்.

அடுத்தாக இவர் ப்ரித்விராஜ், ராம், புனீத் ராஜ்குமார், ஜெயம் ரவி நடிக்கும் பிரமாண்ட மல்டி ஸ்டார் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக ஏற்கனவே அனுஷ்கா, தமன்னா கமிட் ஆக மற்றொரு ஹீரோயினாக மஞ்சிமாவை கமிட் செய்துவிட்டார்.

இதை கேள்வி பட்ட மற்ற இயக்குனர்கள் இந்த ஐடியா சூப்பர் ஏன் இதை நாம் பின்பற்ற கூடாது என யோசித்து வருகின்றனராம்.