தமிழில் கடந்த வருடம் வெளியாகி பலரது பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பிய படம் '96 ' . இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். 

இந்த படத்தில், விஜய் சேதுபதியின் சிறிய வயது ராம் கதாப்பாத்திரத்தில் நடித்த ஆதித்யா, மற்றும்  ஜானு  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கௌரி கிஷனுடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குட்டி பெண்ணாக நடித்திருந்த கௌரி, தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டதால், இவரை சில இயக்குனர்கள் கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது கௌரி கிஷன், அவருடைய ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கில் உருவாகி வரும், '99 ' படத்தில், குட்டி ஜானுவாகவே மீண்டும் நடிப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். 

திரிஷா நடித்த வேடத்தில், சமந்தாவும், விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் சர்வானந்தும் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.