gowndarmani hearth attack rumer

தமிழில் சினிமாத்துறையில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்ட படங்களில் காமெடி, மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் காமெடி நடிகர் செந்தில்லுடன் இணைத்து நடித்த காமெடி படங்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் முக்கியமாக 'கரகாட்டக்காரன்', 'சின்ன கவுண்டர்' போன்ற படங்கள் இன்றும் பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சில நாட்கள் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த கவுண்டர் மணி 49 ஓ , எனக்கு எங்கும் கிளைகள் இல்லை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். 

இந்நிலையில், இவர் திடீர் என மாரடைப்பால் இறந்ததாக ஒரு புரளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில். 

தான் நலமுடன் வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருப்பதாக கவுண்டமணி தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற புரளியை யார் யா கிளப்பி விடுறது என கூறி தன்னுடைய ரசிகர்களுக்கும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.