நடிகை கௌதமி கேன்சர் நோயில் இருந்து மீண்ட பிறகு, புற்று நோய் நோயாளிகளுக்காக தன்னார்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
கமலின் லிவிங் டூ கெதர் பிடியில் இருந்து விலகி வெளியே வந்ததும், ஒரு பக்கம் தொண்டு நிறுவனத்தில் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு புறம் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் .
தீடீர் என மோடியை சந்தித்து அனைவரையும் ஆச்சார்யா படுத்தினார், அதே போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் உள்ளது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த பிரபலமும் இவர் தான் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த கௌதமி , அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசியல் சம்பந்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது கௌதமி அரசியலுக்கு வருவதை உறுதி படுத்துவதாக கூறப்பட்டது. மீண்டும் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றிருந்தால் அவரது தலைமையில் அரசியல் பணியில் ஈடுபடுவது போல் எண்ணம் கொண்டிருந்த கௌதமி... தற்போது வடை போச்சே.... என்பது போல் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது .
