Asianet News TamilAsianet News Tamil

’இளையராஜா 75’ கவர்னர், பொன்னாரை வைத்து எதிரிகளுக்கு ஆப்படித்த விஷால்...

தயாரிப்பாளர் சங்கம் இசைஞானிக்கு விழா எடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தொடர்ந்து இருந்து வந்த எதிர்ப்புகளுக்கு ஆப்படிக்கும் வகையில் கவர்னர் பன்வாரிலால் மற்றும் பா.ஜ.க. தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் ஆகியோரை நிகழ்ச்சியின் உள்ளே கொண்டுவந்து சரியான காய் நகர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.

governor to attend ilayaraja75
Author
Chennai, First Published Jan 29, 2019, 12:25 PM IST

தயாரிப்பாளர் சங்கம் இசைஞானிக்கு விழா எடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தொடர்ந்து இருந்து வந்த எதிர்ப்புகளுக்கு ஆப்படிக்கும் வகையில் கவர்னர் பன்வாரிலால் மற்றும் பா.ஜ.க. தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் ஆகியோரை நிகழ்ச்சியின் உள்ளே கொண்டுவந்து சரியான காய் நகர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.governor to attend ilayaraja75

இளையராஜாவின் விழா நடக்க இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் தயாரிப்பாளர் ஜே.கே. சதீஷ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு விஷாலுக்கு பாதகமாக அமையுமோ என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘இளையராஜா நிகழ்ச்சியை ஏன் தள்ளிவைக்கக்கூடாது? கணக்கு வழக்குகளை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும்’ போன்ற தகவல்கள், நிகழ்ச்சி நடக்குமோ நடக்காதோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தி டிக்கட் விற்பனையை சற்று மந்தப்படுத்தின.governor to attend ilayaraja75

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்க சம்மதித்தார். அடுத்த நகர்வாக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணனையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து, இனி கோர்ட் தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்காது என்பதை விஷால் உறுதி செய்தார்.

விஷாலின் அந்த இரு மூவ்களுக்குப் பின்னர் எதிரணி இருக்கும் இடம் தெரியாமல் பின் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios