Asianet News TamilAsianet News Tamil

பாலாவின் ‘வர்மா’போல் கவுதமின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வும் கைகழுவப்படுகிறதா?...

யுடுப் வலைப்பக்கத்தில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டு வந்த கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படப்பாடல்கள் அவரது பக்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால், பாலாவின் ‘வர்மா’ படம் போலவே இப்படமும் தயாரிப்பாளர்களால் கைவிடப்படுகிறதோ என்று தனுஷின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

goutham's enpt in trouble
Author
Chennai, First Published Apr 5, 2019, 4:59 PM IST

யுடுப் வலைப்பக்கத்தில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டு வந்த கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படப்பாடல்கள் அவரது பக்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால், பாலாவின் ‘வர்மா’ படம் போலவே இப்படமும் தயாரிப்பாளர்களால் கைவிடப்படுகிறதோ என்று தனுஷின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.goutham's enpt in trouble

இப்படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' மற்றும் 'நான் பிழைப்பேனோ' பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மேலும், படத்தின் டீஸருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவை அனைத்துமே கவுதம் மேனனின் 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் திடீரென்று 'எனை நோக்கி பாயும் தோட்டா' சம்பந்தப்பட்ட அனைத்து  பாடல்கள் மற்றும் டீஸர் ஆகியவை 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இதனால், இப்படம் கைவிடப்பட்டதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால், இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. படம் ஒரேயடியாக இழுத்துமூடப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின.goutham's enpt in trouble

ஆனால் அச்செய்திகளை படக்குழு திட்டவட்டமாக மறுக்கிறது. படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் இஷ்டத்துக்கு செய்திகளை எழுதுகிறார்கள்.படம் வெளியீட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறோம். இதற்காக பைனான்சியர்களிடம் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இச்சமயத்தில் தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாக வந்தார்கள். இதற்கு முன்பாக, இப்படத்தின் இசை உரிமை அனைத்துமே கவுதம் மேனனிடம் தான் இருந்தது. ஆகையால் தான் அவருடைய நிறுவனத்தின் யூ டியூப் பக்கத்திலே இடம்பெற்றிருந்தது.goutham's enpt in trouble

தற்போது படத்தின் ஆடியோ உரிமையும் விநியோக உரிமையும் வேறொரு நிறுவனத்துக்கு மாற இருப்பதால் அதற்கு தோதாக கவுதம் தன் பக்கத்திலிருந்து அதை ஹைட் செய்துவைத்திருக்கிறார். சென்சார் முடிந்து ஒரு மாபெரும் எதிர்பார்ப்புள்ள படத்தை டிராப் ஆகிவிட்டதாக எழுதுவதெல்லாம் நியாயமா? என்று கேட்கிறார்கள் படக்குழுவினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios