பாலிவுடில் பிரபல நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா, ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளார். இதனால் அவர் தனது பெயரை நடிகர் கவுரி அரோரா என மாற்றிக்கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 இதுகுறித்து பேசிய அவர், ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தான், நான் ஒரு ஆண் அல்ல பெண் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்ணாக மாறத் தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கு தான் உடல் ரீதியாக தயாராகிவிட்டதாகவும், இதற்கு தேவையான மருந்துகளை சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

அதுமட்டுமில்லாமல், பெண்ணாக மாற தான் பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பயந்து தன்னால் முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு கூட முயன்றுள்ளதாக அவர் கூறினார்.