திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்திருந்த நிலையில் தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்தார்.

 

“நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம். 2016ல் சென்னைக்கு வந்தேன். ஒரு புரோடக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கினேன். பச்சைப்பா சில்க் விளம்பரம் போது தான் அவர் எனக்கு முதல் அறிமுகம் ஆனார். படங்களுக்கும் எனக்கு சனம் செட்டி நிறைய உதவி செய்துள்ளார். அதை நான் மறுக்க மாட்டேன். போத்தீஸ் விளம்பரத்தில் என் விளம்பரம் நல்ல ரீச் ஆச்சு. அதனால் என்னை விஜய் டிவி தரப்பில் அழைத்தார்கள்.

பிக் பாசில் இருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மாதத்திற்கு என் ஃபேஸ்புக் பக்கத்தை சனம் தான் பயன்படுத்தி வந்தார். பைக்கை விற்று சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்த எனக்கு சனம் கொடுத்தத்த நிபந்தனைகளு க்கு ஈடு கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என் அவர் என்னை மிரட்டினார். சனம் வீட்டார்க்கு மட்டுமே நிச்சயம் ஆனது தெரியும். என் வீட்டிற்கு கண்டிப்பாக அது தெரியாது. காரணம் எனக்கு ஒரு தங்கை இருக்காங்க என்பதால் தான்.

 தங்கைக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்பதால் எனக்கு சனம் மூன்றைறை லட்சம் கொடுத்து இருந்தார். அதை நான் பிக் பாஸ் பணம் வந்த பின்னர் கொடுத்து விட்டேன். ஒருநாள் பார்ட்டிக்கு சனம் சென்றுள்ளார். அப்போது அவரது பழைய காதலனை சந்தித்து இருக்கிறார். பின்னர் அவருடன் பார்ட்டிக்கு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார். 

பிக் – பாசில் இடையே வெளியே வந்த போது அவர் மற்றொருவருடன் இருந்தார். அதற்கான ஆதாரம் உள்ளது. அந்த நபர் யார் என்பது கூற முடியாது. இதற்கு பின்னர் நான் எப்படி அவருடன் வாழ முடியும். அவர் மீது நன்றியுடன் நான் உள்ளேன். வழக்கு எல்லாம் நான் தொடார மாட்டேன். போலீஸ் கமிசனர் கேட்டால் வீடியோ,வாய்ஸ் ரெக்காடர் போன்ற ஆதாரங்களை சமர்ப்பேன். என்னை பொறுத்த வரை அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை, விளக்கம் கொடுக்க தான் இந்த சந்திப்பு’’ என அவர் தெரிவித்தார்.