தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வன்மையான தெரிவித்துக் கொள்வதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப்சீரிஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் காட்மேன் இணைய தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக உட்பட 5 அமைப்புகள் புகார் அளித்தனர்.

 அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். ஆனால் நேற்று இருவரும் ஆஜராகாததால் வரும் 6ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’காட்மேன், ஜி-5 இந்தியா தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வன்மையான கண்டனங்கள். இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய ஜி-5 இந்தியா  நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல. மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.