Go to the film again and again on the negative roll in spider
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடிகர் பரத் செல்லமே படத்திற்கு பிறகு மீண்டும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
நடிகர் பரத் ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதையடுத்து நடித்த ‘காதல்’ படம் நடிகர் பரத்தை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது.
பின்னர் வரிசையாக ‘செல்லமே’, ‘பிப்ரவரி 14’, ‘பட்டியல்’, ‘என் மகன்’, ‘வெயில்’ உட்பட பல படங்களில் நடித்தார்.
‘பழனி’, ‘சேவல்’ போன்ற ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் சரியான படங்கள் அமையாததால் கேரக்டர் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
‘கடுகு’ படத்தில் அப்படியான கேரக்டரில் நடித்தார். தற்போது அவர் ‘பொட்டு’, ‘கடைசி பென்ஞ் கார்த்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தில் நடிகர் பரத் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பரத் எஸ்.ஜே.சூர்யாவின் அடியாளாக நடித்துள்ளார்.
