gnanavel raja announced gift

இயக்குனர் பாரதி ராஜா நடித்து இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள திரைப்படம் "குரங்கு பொம்மை".

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரையுலகை சேர்த்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரைத்துறையை சேர்த்த சிலரே, பலரை திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க விடாமல் தடை செய்கின்றனர் என்று குற்றம் சாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர் புதிய திரைப்படங்கள் திருட்டு விசிடிகள் மூலம் வெளிவராமல் இருக்க தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும். அதே போல கேபிள் டிவிக்களில் புதுப்படம் ஒளிபரப்பபடுவது பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.