காமராஜர் பார்ட் 2 ரிலீஸ் எப்போது?... தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கொடுத்த அப்டேட்!

பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தின் இரண்டாம் பாகம்  அடுத்த வருடம் வரும்  காமராஜரின் 120 வது பிறந்தநாள் அன்று வெளியாகும் என ஜி.கே.வாசன்  தெரிவித்துள்ளார். 

GK Vasan about kamarajar movie part 2 update

பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தின் இரண்டாம் பாகம்  அடுத்த வருடம் வரும்  காமராஜரின் 120 வது பிறந்தநாள் அன்று வெளியாகும் என ஜி.கே.வாசன்  தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ஜி.கே.மூப்பானரின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

GK Vasan about kamarajar movie part 2 update

அதன் பின் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,கடந்த காலத்தில் ஜி.கே.மூப்பனார்   நடத்திய அமைதிப் பேரணியில் நான் மருத்துவராக பணியாற்றினேன் அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்த தருணம் என்றும்
மேலும் ஜி.கே .மூப்பனார் அமைதியான முறையில்பல  புரட்சிகளை செய்தவர் என்றும் கட்சி பணியில் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்பவர் என்று புகழாரம் சூட்டினார்.

GK Vasan about kamarajar movie part 2 update

பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜி.கே வாசன்,2 004 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் என்ற படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜி.கே.வாசன்  அடுத்த வருடம்  காமராஜரின் 120வது பிறந்த நாளன்று படம்  திரையிடப்படும் என்ற தெரிவித்தார்.குறிப்பாக முதல் பாகத்தில் காமராஜர் கதாபாத்திரத்தில் நடித்த மதுரம் என்பவரின் மகன் ரிச்சர்ட் மதுரம்  இரண்டாம் பாகத்தில் காமராஜரின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios