Asianet News TamilAsianet News Tamil

புருவப் புயல் “பிரியா வாரியர்” மாதிரி கண் அடிச்சா “ஒரு வருடம் சஸ்பெண்ட்”! கல்லூரி நடவடிக்கை... மாணவிகள் அதிர்ச்சி...

girls will be suspended one year like act priya prakash variar
girls will be suspended one year like act priya prakash variar
Author
First Published Mar 20, 2018, 1:24 PM IST


இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்ட நடிகர் பிரியா வாரியாரைப் போல  கன்னடிப்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளததால் மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

girls will be suspended one year like act priya prakash variar

ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அடுத்து ட்ரெண்டாகி வந்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டுள்ளது. 

girls will be suspended one year like act priya prakash variar

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. இவருக்கு தமில், மலையாள, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே விளையாட்டாக கண் அடித்து பலர் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். மேலும் கல்லூரி பெண்கள் பிரியா பிரகாஷ் வாரியாரைப் போல கல்லூரி வருப்பு அறையில் கண்ணடித்து கலவரம் செய்கின்றனர்.

girls will be suspended one year like act priya prakash variar

இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம். தகவல் அறிந்த ஆசிரியர்கள் மேலிடத்திற்கு தகவல் கொடுக்க, அப்படி செய்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளார்களாம். இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios