girls addicted in the name of marraige said mu.kalanjiyam

பெண்களை திருமணம் என்ற பெயரில் தமிழ் சமுதாயம் அடிமைகளாக மாற்றுகிறது – திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் அதிரடி பேச்சை வெளிப்படுத்தி உள்ளார்

கோவில்பட்டியை சேர்ந்த சங்கரநாரயணன் - கோமதி தம்பதியின் மகன் வைரமயில். இவர் கோவில்பட்டியில் பள்ளி மற்றும் டிப்ளமோ படிப்பினை முடித்து, ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ முடித்த பின்பு தன மேற்படிப்புக்காக ஸ்வீடன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தனது மேற்படிப்பினை முடித்த பின்பு வைரமயில் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

கடந்த 1 வருடமாக காதலித்த இருவரும் தங்கள் காதலை பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் பெற்று இருவரின் திருமணம் இன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் தமிழ்முறைப்படி, மேளதள முழங்க திருமணம் நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த திருமணத்தினை திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் தமிழ் இளைஞர்கள், பெண்கள், தமிழ் முறைப்பாடி திருமணம் செய்து கொள்ள முன்வரவேண்டும், பெண்களை தமிழ் சமுதாயம் அடிமைகளாக மாற்றுகிறது. இத்தகைய திருமணங்கள் தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்களுக்க சம உரிமை கொடுத்தால் தான் வீட்டு நிர்வாகமும், நாட்டு நிர்வாகம் நன்றாக இருக்கும் என்றார். திருமண நிகழ்ச்சியில் வைரமயில் உறவினர்கள், மற்றும் பீட்ரிச் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது