இவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்தான். இப்படி தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்த அவர், முதல்முறையாக தளபதி விஜய்யுடன் 'பிகில்' என்ற பிரம்மமாண்ட படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
 
தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆஃபிசில் வசூலை வாரி குவித்து வருகிறது. அத்துடன், படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த இந்துஜாவுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. 

இந்துஜாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவரை பற்றிய ட்ரோல்களும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. 

பிகில் டிரைலரில் வரும் "கேக்கல..கேக்கல" சீன் டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் மிக அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து, சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ள இந்துஜா, தான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே தன்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், அதை தான் ஜாலியாக எடுத்துக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து என்ஜாய் செய்வதாகவும், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை ப்ரமோட்தான் செய்கிறார்கள் என்றும் உற்சாத்துடன் பாஸிட்டிவ்வாக கூறியுள்ளார் இந்துஜா. 
பிகில் படத்தின் வெற்றியால் உற்சாத்துடன் இருக்கும் அவர், தற்போது, விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.