எம்.ராஜேஷ் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள Mr. லோக்கல் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. 

இந்த டீசரில், என் பெயர் மனோகர் என்னை ஏரியாவுல எல்லோரும் செல்லமா மிஸ்டர் லோக்கல்னு கூப்பிடுவாங்க என்று தொடங்கும் படத்தின் டீசரில் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் அடிக்கடி மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆக நடித்திருக்கும் நயன்தாராவை,டோரா புஜ்ஜிய தூக்கி வச்சு கொஞ்சப்போறேன் என்று மலையாளம் கலந்த தமிழில் சிவகார்த்திகேயன் அழைப்பது டீசரின் செம்ம சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் மே 1-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகும் என  படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி தற்போது இப்படத்தின் டீஸர் அதிகாரபூர்வமாக யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.