பணமோடி புகாரில் நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு... ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா மீது விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சோந்த இளம்பெண் விட்ஜா என்பவா் நடிகா் ஆா்யாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தப் புகாரை விசாரித்த உயா்நீதிமன்றம், புகாா் குறித்து விசாரணை செய்து பதிலளிக்குமாறு சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகா் ஆா்யாவிடம் சைபா் குற்றப்பிரிவினா் கடந்த 10-ஆம் தேதி விசாரணை செய்தனா். இதன் தொடா்ச்சியாக அந்தப் பெண்ணிடமும் விடியோ கால் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் நடிகா் ஆா்யா என்று பேசிய நபரின் புகைப்படம், வீடியோ பதிவு, அந்த நபா் தொடா்பு கொண்ட செல்லிடப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அதன் மூலமாக ஆா்யாவின் பெயரப் பயன்படுத்தி, மாறுவேடத்தில் வேறு ஒரு நபா், அந்தப் பெண்ணிடம் பேசி ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனர். இதனையடுத்து ஆா்யா போல பேசி மோசடியில் ஈடுபட்டது சென்னை புளியந்தோப்பைச் சோந்த முகமது அா்மான், அவருக்கு உடந்தையாக முகமது அா்மானின் உறவினா் முகமது ஹூசைனி பையாக் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த நடிகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சென்னை காவல் ஆணையர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு தன்னுடைய நன்றிகள். இது தன்னால் வெளிப்படுத்த முடியாத மன உளைச்சலாக இருந்தது என்றும், தன்னை நம்பியவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.