Asianet News TamilAsianet News Tamil

தமிழ் சினிமாவைப் பிரியாத வரம் வேண்டும்... ஜீனியஸ் நாயகி பிரியாலால்!

தமிழ் சினிமாவுக்கு மலையாள நடிகைகளின் வரவில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு பரிகாரம் செய்யும் வகையில் ‘ஜீனியஸ்’ படம் மூலம் வலது கால் எடுத்துவைத்திருக்கிறார் பிரியாலால்.

Genius movie actress priyalal
Author
Chennai, First Published Oct 23, 2018, 5:51 PM IST

தமிழ் சினிமாவுக்கு மலையாள நடிகைகளின் வரவில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு பரிகாரம் செய்யும் வகையில் ‘ஜீனியஸ்’ படம் மூலம் வலது கால் எடுத்துவைத்திருக்கிறார் பிரியாலால். மலையாளத்தில் நான்கு படங்கள், தெலுங்கில் ஒரு படம் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் என் முதல் படம். இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது.  ‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன்.

 Genius movie actress priyalal
 
வெண்ணிலா கபடி குழு,  நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். ஒரு நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன்.
 
இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்த கதாபாத்திரத்தைக் கெடுத்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படிதான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன். Genius movie actress priyalal
 
மேலும், பல பேருக்கு இந்த படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது. 

 நீண்ட நாட்களாக ஒரு கனவு,  தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று.  பாட்டு, நடனம், நடிப்பு  போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனால் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர்  யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ஜீனியஸ் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.  யுவனின் மிகப் பெரிய விசிறி நான். அதுபோலவே தமிழ் சினிமா மீது எனக்கு தீராத காதலுண்டு. இங்கே நீடித்து இருக்கவிரும்புகிறேன்’ என்கிறார் பிரியாலால்.

Follow Us:
Download App:
  • android
  • ios