பிரபல நடிகையும், பிஜேபி பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனக்கு மிகவும் நெருக்கமானவர் மரணம் குறித்து தெரிவித்து தன்னுடைய சோகத்தை பகிர்ந்துள்ளார்.

நமக்கு தெரிந்தவர்கள், திடீர் என இறந்து விட்டதாக செய்தி கேட்டாலே மனம் நொந்து விடுவோம். அதுவும் நம்மிடம், நமக்காக, வேலை செய்தவர் இறந்தால் இதயமே நொறுங்கிவிடும் இல்லையா அந்த உணர்வு தான் தற்போது காயத்ரி ரகுராமிற்கு.

இவரிடம் பல வருடங்களாக மேக்அப் ஆர்டிஸ்ட்டாக வேலை செய்தவர் சம்பத். இவர் உடை நலக்குறைவு காரணமாக திடீர் என மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சியான காயத்ரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இதயமே நொறுங்கி விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,  ’எனது மேக்கப்மேன் சம்பத் சகோதரர். திடீரென மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தியை கேட்டு எனது இதயமே நொறுங்கி விட்டது. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அண்ணா’. நீங்கள் பல நிகழ்ச்சிகளுக்கு எனக்கு மேக்அப் போட்டுள்ளீர்கள். மிகவும் சின்சியர் மற்றும் எளிமையான நபர். உங்கள் குடும்பத்திற்கு ஆழ்த்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் பதிவு இதோ..