கொள்கைகள் அடிப்படையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை மறந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவருடைய சகோதரியை இழந்த துக்கத்தில் இருந்த போது, ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமாவளவனுக்கு பக்க பலமாக, உதவியாக இருந்த இவரின் உயிரிழப்பு திருமாவளவன் மட்டும் இன்றி, கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், பா.ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகையும் பாஜக கட்சி பிரமுகருமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்றும், அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரீக கருதி பல செய்த இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது .