உங்கள பார்த்தாலே நடிகைகள் பயந்து ஓடுறாங்க... விஷால் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த காயத்ரி ரகுராம்...!
நடிகர் விஷாலின் பதிவிற்கு தற்போது நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது தலை தலைதூக்கி உள்ளதால், அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது, ராஜகோபாலன் என்கிற ஆசிரியன், ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளை பெற்றோர் ஆசிரியர்களை நம்பி பள்ளிக்கு அனுப்பும் நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் இது போன்ற கீழ்த்தனமான செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆசிரியரின் செயலுக்கு அரசியல் வாதிகள் முதல் பிரபலங்கள் வரை பலர் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்த வருகிறார்கள்.
இதுபோன்ற தவறுகள் ஆன்லைன் வகுப்பில் நடைபெற கூடாது என, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிப்பதற்கும் முறை படுத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் நேற்று PSBB பள்ளி விவகாரம் குறித்து தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் "பிஎஸ்பிபி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை கூனிக்குறுக வைக்கிறது. அந்தப் பள்ளி கண்டிப்பாக மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இன்னும் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள குடியாத ஒன்று. இதுபோன்ற குற்றங்களுக்கு தீவிர நடவடிக்க எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய நண்பரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இதனை ஒரு சாதிப் பிரச்சினையாக சிலர் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபரை தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்படி செய்தால் தான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரியும். குறைந்தபட்சம் இப்போதாவது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்’ என்று விஷால் பொங்கி எழுந்திருந்தார்.
நடிகர் விஷாலின் பதிவிற்கு தற்போது நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "சினிமா துறையை பொறுத்தவரையில் முதலில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், சினிமாவில் புதிதாக நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மூத்த பெண் நடிகர்களை பாருங்கள் என கூறியுள்ளார்.
மேலும்,மற்றொரு பதிவில்... நீங்களும் உங்களது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள்தான். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் உதவித்தேவைப்படும் பெண்களுக்குத் துணையாக உங்கள் வீரத்தை நீங்கள் காண்பித்து இருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ வேறாக இருக்கிறது. உங்களது தொடர் அணுகுமுறையால், நடிகைகள் உங்களைக் கண்டாலே ஓடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.