காயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குனரின் மகள் என்பதையும் தாண்டி நடிகை, நடன இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பல்வேறு கோணங்களில் அரைவராலும் அறியப்படுகிறார். 

இவர் எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்தாலும் இவரின் தந்தையின் சாதனைகளை முறியடிக்க முடியாது. பல்வேறு நடன கலைஞர்களுக்கு குருவாக திகழ்ந்த இவருடைய பெயரை  தற்போது காயத்ரி ரகுராம் கெடுத்து வருவதாகவே அனைவரும் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓவியாவை பிடிக்கவில்லை. தற்போது அவருடன் பிரச்சனை இல்லை என்று கூறி ஓவியா முன் சிரிப்பதும், பின் அவரை பற்றியே பின்னல் சென்று புறம் கூறி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நாயகி ரம்யா நம்பீசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காயத்ரி ஒரு பச்சோந்தி, நேரில் பார்த்தால் சிரிப்பதும் பின் ஓவியாவை பற்றி புகார் கூறுவதுமாக இருக்கிறார், மோசமான குணம். ஓவியா நீங்கள் தான் சரி என்று கூறியுள்ளார்.

அதே போல ஓவியாவை மிகவும் செல்லமாக... ஓவியா டார்லிங் உனக்காக கடைசி வரை நாங்க இருப்போம் என கூறியுள்ளார்.