தெய்வமகள்:

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 4 நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பான தொலைக்காட்சித் தொடர் 'தெய்வமகள்' இந்த தொடரில் சத்யா என்கிற காதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலை தொடர்ந்து வாணிக்கு நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்புகளும் கிடைத்தது.

காயத்ரி அண்ணியார்:

நடிகை வாணி போஜனுக்கு எந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போல, இந்த தொடரில் காயத்ரி என்கிற கதாப்பாத்திரத்தில் வில்லியாக நடித்த கன்னட சீரியல் நடிகை ரேகாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

தேடி வரும் வாய்புகள்:

தெய்வமகள் சீரியல் முடிந்த பின்பு தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரில் மந்திரவாதி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் காயு டார்லிங் என்பது அனைவரும் அறிந்தது தான்.

சிவகார்த்திகேயனுடன் படம்:

இந்நிலையில் இவர் சீரியலைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ஒரு படத்திலும் நடித்துள்ளாராம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விரைவில் அந்தப்படம் வெளியாகும் என அது வரை காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.