மத துவேசத்தைப் பரப்பும் கமலையும் அவரது பேச்சை ஆதரிக்கும் கனிமொழி, மு.க.ஸ்டாலின், கீ.வீரமணி ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெனாவட்டு காட்டியிருக்கிறார் பி.ஜே.பி.நடிகை காயத்ரி ரகுராம்.

‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என்ற ஒற்றை வரி விமர்சனத்தின் மூலம் உலக சர்ச்சை நாயகனாகியிருக்கும் கமலை சுமார் 90 சதவிகிதம் பேர் விளாசித்தள்ள தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கி.வீரமணி, தொல் திருமாவளவன் போன்றோர் ஆதரித்துவருகிறார்கள்.

இந்நிலையில் தன் பங்குக்கு கமலை விளாசித்தள்ளிய பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம்,’கமல் சார் நீங்க பேசிய தவறான விஷயத்துக்காக கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில மன்னிக்கிறவங்கள விட மன்னிப்புக் கேட்குறவங்க பெரிய ஆளுங்கன்னு நீங்க சொன்னதை மறக்கவேண்டாம் என்றும் இன்னொரு பதிவில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் காயத்ரி,...அம்மா இருந்திருந்தா இப்பிடியெல்லாம் சவுண்டு விட்டுருப்பாங்களா...கமல், கனிமொழி,ஸ்டாலின் கி.வீரமணி மேல கடுமையான நடவடிக்கை எடுங்க சார்’ என்று பதிவிட்டிருக்கிறார்.