’திரும்பத்திரும்ப பேசுறே...திரும்பத்திரும்ப பேசுறே’ காமெடி மாதிரி தான் குடித்து விட்டு கார் ஓட்டிய பஞ்சாயத்தை விடாமல் பிடித்துக்கொண்டு டிராமா ஆடிக்கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி ஜெயராமன். இது குறித்து வீடியோக்களும் வெளியிட்டுவருகிறார்.

அவர் நேற்று பெரிய இடம் ஒன்றில் கொடுத்த பிரஷரால் பத்திரிகைகளுக்கு செய்திகொடுத்த காவலர்களை உயர் அதிகாரிகள் துவைத்து எடுத்தனராம்.  அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தற்போது தனக்கு எதிராக தன் பி.ஜே.பி.கட்சியினரே களம் இறங்கியிருப்பதாக குற்றம் சாட்டத்துவங்கியிருக்கிறார் காயத்ரி.

பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கும் காயத்ரி ரகுராம், இன்று  தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.

...தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்த பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது’ என்கிறார் காயத்ரி அப்பதிவில்.

ரொம்ப சிம்பிளா ’நாளை முதல் குடிக்கமாட்டேன். அப்படிக் குடித்தாலும் காரை ஓட்டமாட்டேன். அப்படியே ஓட்டினாலும் போலீசிடம் பிடிபடமாட்டேன்னு ட்விட் பண்றத விட்டுட்டு வேற என்ன சொன்னாலும் எடுபடாது காயத்ரி. பொய் சொல்லச்சொல்ல உங்க க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது...