Gayathri criticizing julie in bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. சில நாட்களாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் சிரித்துக்கொண்டே இருந்த ஜூலி மீது மீண்டும் கல் எறிய ஆரம்பித்துள்ளனர்.

நடன இயக்குனர் காயத்ரியும், நடிகை ஆர்த்தியும் ஜூலியை தரைகுறைவாக பேசி கதற வைத்த காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.

இதனால் ஜூலி தன்னுடைய படுக்கைக்கு சென்று அழுது கொண்டிருக்கிறார், அவரை ஓவியா தான் சமாதானம் செய்கிறார்.

மேலும் ஜூலிக்காக காயத்ரியிடம் போய் ஏன் ஜூலியிடம் இப்படி பேசுனீங்க என ஓவியா கேட்க அதற்கு காயத்ரி வெளியேற்றம் வரும் போது அக்கா அக்கா என வந்து வழியிறா.. வெளியேற்றம் முடிந்த பிறகு தெனாவட்டாய் சிரிக்கிறா என எரிச்சலோடு கூறுகிறார்.

மேலும் ஜூலி ஒரு மட்டமான ஜென்மம் என கூறுகிறார், இதற்கு சாப்பாட்டு ராமன் ஆர்த்தி அவளுக்கு அவ்வளவுதான் மூளை என நக்கலாக கூறுகிறார். இது குறித்து அடுத்ததாக பேசும் ஜூலி, நான் தப்பு செய்தால் பரவால்ல.. தப்பே செய்யாமல் என்னை ஏன் திட்டுகிறார்கள் என தன்னுடைய கண்ணீரை தாரை தாரையாக வடிக்கிறார்.