பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தான் பலர் ஜூலியை தொடர்ந்து விமர்சித்தார்கள் என்றால், இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், தற்போதும் சிலர் சமூக வலைத்தளத்தில், ஜூலியை கட்டம் கட்டி கமெண்டால் தாக்கி வருகின்றனர்.

மேலும் கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு, பிக்பாஸ் ஜூலியும் அவருடைய ஆண் நண்பர்களும் காவல்துறை ஏட்டு ஒருவரை தாக்கியதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின் இந்த சம்பவத்திற்கும் தனக்கு சம்மந்தம் இல்லை. இந்த விபத்து நடந்த போது அந்த இடத்தில் நான் இல்லவே இல்லை என விளக்கம் கொடுத்தார் ஜூலி.

எனினும், இவரை ஒரு பெண் என்றும் பார்க்காமல், சமூக வலைத்தளத்தில் ஜூலியை சிலர் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தனர். இதற்க்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோவில், ஏன் என்னை தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் திட்டுகிறீர்கள், இப்படி திட்டுவதால் உங்களுக்கு எதாவது லாபம் இருக்கிறதா?  தன்னை பற்றி சிலர் கூறும் கமெண்டை பார்க்க கூட முடியவில்லை. நானும் உங்களுடைய அக்கா தங்கை போல் தானே... என ஆவேசமாக தன்னுடைய மனதில் இருந்த வலியை இந்த வீடியோவில் வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பொய் சொன்னது உண்மைதான். ஆனால் பிக்பாஸ் எப்போதோ முடிந்துவிட்டது. அதனை வைத்து இன்னும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவது நியாயமே இல்லை. அப்படியே இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு பொய் கூட சொன்னதே இல்லையா என கேள்வி எழுப்பி இருந்தார். 

அதே போல் எனக்கு ஆதரவாக கமெண்ட் அளித்தவர்களுக்கும் அட்வைஸ் செய்தவர்களுக்கும் நன்றி என்று ஜூலி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஜூலியின் இந்த வீடியோ குறித்து, நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், 'ஜூலி இதுகுறித்து உடனே காவல்துறையில் புகார் கொடு. அதற்கு நான் உதவி செய்கிறேன். கடவுளை நம்பு அவர் உன்னுடன் இருக்கிறார். இதுபோன்ற லூசுகளிடம் பேசி உன் நேரத்தை வீணாக்காதே! உன்னுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்களையும், மூளையில்லாத சைக்கோக்களின் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளதே. என மோசமான கமெண்ட் கொடுத்து வருபவர்களை தாக்கி பேசி, ஜூலிக்கு சப்போர்ட் செய்துள்ளார் காயத்திரி.