பிஜேபி கட்சியின், தீவிர ஆதரவாளரும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை இந்துக்கள் எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று பதிவு செய்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

திருமாவளவன், பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது நான் மோடிக்கு எதிரானவன், ஆனால் சில மதவெறியர்கள் நான் இந்து மதத்திற்கு எதிரானவன் என்பது போன்று சித்தரித்து வருகின்றனர் என்று பேசியிருந்தார். மேலும் என்னை பின்பற்றும் பலர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கு காயத்ரி ரகுராம், சற்றும் சம்மந்தம் இல்லாமல்...  இந்துக்கள் திருமாவளவனை எங்க பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும் என ட்விட் போட்டார். இந்த பதிவு திருமாவளவன் ஆதரவாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், காயத்ரி ரகுராமை எதிர்க்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திருமாவளவனின் ஆதரவாளர்கள், சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெண்கள் பலர், மிகவும் ஆக்ரோஷமாக... காயத்திரி ரகுராம் போட்ட ட்விட்டிற்காக அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும், அதுவரை விடமாட்டோம் என கோவமாக கூறினர்.

மேலும், காயத்திரி ரகுராமன் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் ஆதரவாளர்களை சமாளிப்பதற்காக, தற்போது, தன்னுடைய வீட்டிற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.